![Petta Vs Viswasam Petta Vs Viswasam](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2018/12/Petta-Vs-Viswasam-2-696x479.jpg)
Petta Theaters : விஸ்வாசத்தால் ஒரு பகுதியில் மட்டும் பேட்ட படத்திற்கு பலத்த அடி விழும் என கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொங்கல் பேட்டியில் ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? என்ற எதிர்பார்ப்பு ரஜினி, அஜித் ரசிகர்களையும் தாண்டி அனைவரிடமும் உள்ள எதிர்பார்ப்பு.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.
அதே போல தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நாடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த இரண்டு படங்களும் தற்போது தியேட்டர்களை பிடிக்கும் பணிகளில் மும்மரமாக இறங்கியுள்ளன.
விஸ்வாசம் படம் முதலிலேயே பொங்கலை குறித்து பால தியேட்டர்களை பிடித்து விட்டது. பேட்ட படம் தியேட்டர் விவகாரத்தில் லேட்டாகா களமிறங்கியதால் குறைவான தியேட்டர்களே கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதிலும் மதுரை பகுதியில் இதுவரை பேட்ட படத்திற்கு ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே கிடைத்துள்ளது. விஸ்வாசம் படம் மதுரையை சார்ந்த கதை என்பதால் அப்பகுதியில் பேட்ட படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகா தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் ரஜினி ரசிகர்கள் ஆதிர்ச்சியடைந்துள்ளனர். பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் உள்ளதால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.