சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் பேட்ட படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று இணையத்தில் வெளியாகி இருந்தது.

இதில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் இதனை கொண்டாடி வரும் வேளையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் யாரோ ஒருவர் ரஜினியின் லுக்கை அரசியல் பிரமுகர் பழனிசாமி என்பவரது லுக் போலவே இருப்பதாக கமெண்ட் அடித்துள்ளார்.

இதனை கஸ்தூரி ரி-ட்வீட் செய்து அட பாவிங்களா என பதிவு செய்துள்ளார். இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரை திட்டி தீர்க்க கஸ்தூரி அது என்னுடைய பதிவல்ல எனவும் பதிலளித்துள்ளார்.