Petta Release Date

Petta Release Date : பேட்ட ரிலீஸ் தேதி உறுதியாகி ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. அந்த தகவல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் சென்சார் பணிகள் இரு தினங்களுக்கு முன்னர் முடிவடைந்து படத்திற்கு U /A சான்றிதழ் கிடைத்திருப்பதாக அறிவித்து இருந்தனர்.

இதனையடுத்து சென்சாரில் கட் செய்யப்பட்ட காட்சிகள் குறித்த விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 10 எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் பேட்ட படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. மேலும் பேட்ட படத்துடன் தல அஜித்தின் விஸ்வாசம் படமும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது என்பது இப்படத்திற்கு சென்சாரில் U சான்றிதழ் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.