சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ஷெட்டி, சசிகுமார், திரிஷா, சிம்ரன் என மிக பெரிய பட்டாளமே நடித்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் சில புகைப்படங்கள் இணையதளங்களில் லீக்காகி வைரலாகி இருந்தது. இதனை ரசிகர்களும் ஆர்வமுடன் ஷேர் செய்து வைரலாக்கி வந்தனர்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க பிரபல தொலைக்காட்சி சேனலான தந்தி டிவியில் இதை ஒரு செய்தியாக உருவாக்கி இருந்தது படக்குழுவினரை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இதனால் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தந்தி டிவியை எச்சரித்து ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அந்த டீவீட்டில் தொலைக்காட்சி சேனல்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவைகளை மீறாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.