முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவங்களால் இப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது அக்டோபர் 2-ம் தேதி சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும் போது அரசியல் வாதிகளை பற்றி குட்டி கதை ஒன்றை கூறி இருந்தார்.

மேலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டு இருந்த பன்ச் டைலாக் ஒன்றையும் பேசி இருந்தார். இதெல்லாம் விஜயும் முருகதாஸும் திட்டமிட்ட பேசியவை தான்.

விஜய் முருகதாஸால் சிக்கலில் பேட்ட - தயாரிப்பாளரின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

இவையெல்லாம் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கே தெரியாது என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் சர்கார் டீம் மீது அவர் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இனி நடக்க உள்ள பேட்ட இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய அனுமதி இல்லாமல் எதுவும் நடக்க கூடாது என கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டாராம்.