Petrol Diesel Price 20.12.18

Petrol Diesel Price 20.12.18 : 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.29 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.14 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (20.12.2018) அமலுக்கு வந்த விலை:

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, லிட்டருக்கு 73.29 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, லிட்டருக்கு 68.14 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது.நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், இன்றும் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் குறையுமா? அல்லது முன்பை போல கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டு விடுமோ என்ற அச்சம் தான் பெரும்பாலான வாகன ஓட்டிகளிடையே நிலவி வருகிறது.

இது சென்னை நகருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.