
Petrol And Diesel Price 24.11.18 :
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.12 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.74.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(24.11.2018) அமலுக்கு வந்த விலை, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 34 காசுகள் குறைந்து லிட்டருக்கு 78.12 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 42 காசுகள் குறைந்து லிட்டருக்கு 74.13 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிடுகுடுவென விலை ஏற்றத்தில் உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.