உலகின் பிரபல தேடுபொறி நிறுவனம் கூகுள். இது அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தேடு பொறி மட்டும் அல்லாது பல வகையான வசதிகளையும் நிர்வகித்து வருகிறது.

கூகுள் பிளஸ் வலைத்தளம் கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக் போன்றவற்றிக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் தான் கூகுள் பிளஸ் செயல்பட்டு வருகிறது.

தற்போது, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் -இல் செய்தி வெளியாகியுள்ளது அதாவது, ‘ கூகிள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல் திருடப்படுவதாக தெரிவித்துள்ளது ‘.

இதனையடுத்து கூகுள் பிளஸ் வலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

5,00,000க்கும் மேற்பட்ட கூகுள் பிளஸ் தனிநபர், பயனர்களின் கணக்குகளில் ஏற்பட்ட தொழிற்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூகுள் தெரிவித்துள்ளது .

இதுகுறித்து கூகுள்  நிறுவனத்தின் செய்தியாளர் கூறியதாவது, ‘ கூகுள் பிளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தல் போன்ற குறிப்பிட்டதக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிக குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

எனினும், ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் பிளஸ் வலைத்தள கணக்கை பயனர்கள் பயன்படுத்தலாம் , எனவே பயனர்கள் தங்கள் தகவல்களை சேகரித்து வைத்து கொள்ளலாம்.