YouTube video

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின். இந்த திரில்லர் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைச்சுருக்கம் :

Penguin Movie video Review : கீர்த்தி சுரேஷ்  திருமணமாகி ஒரு ஆண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் என் மகன் தொலைந்து விடுகிறான். ஆறு வருடமாக தனது மகனைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் கீர்த்தி சுரேஷ் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். தன் மகனுக்கு அவர் கூறிய கதை போலவே படத்தின் காட்சிகளும் நகர்கிறது.

ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷின் மகன் கிடைத்து விடுகிறான். உண்மையில் என்ன நடந்தது? அவனை கடத்தியது யார்? அவன் கிடைத்த பிறகு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்

நடிப்பு :

கீர்த்தி சுரேஷ் மகாநதி திரைப்படத்தில் போல இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி மையமாகக் கொண்ட கதையிலும் தன்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களும் அவர்களின் வேலையை கச்சிதமாக சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

கார்த்திக் பழனி என்பவர் ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக படமாக்கியுள்ளார்.

எடிட்டிங் :

அணில் கிரிஷ் படத்துக்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு அழகான கொடுத்துள்ளார்.

இயக்கம் :

ராட்சசன் படத்தைப் போல ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதை திறம்பட இயக்கியுள்ளார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்.

தம்ப்ஸ் அப் :

1.கீர்த்தி சுரேஷ் நடிப்பு
2.இசை
3.ஒளிப்பதிவு
4.படத்தின் ட்விஸ்ட்
5.க்ளைமேக்ஸ்

தம்ப்ஸ் டவுன் :

1.சில இடங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை.
2.ராட்சசன் படக்கதையை வைத்து உருவாக்கப்பட்ட கதையோ என எண்ணத் தோன்றுகிறது.
3.வழக்கமான சில லாஜிக்கல் தவறுகள்.
4.கிராபிக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் பெண் குயின் ரசிகர்களை ஈர்க்கும் திரில்லர் படமாக இருக்கும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.