சபரிமலைக்கு வரவேண்டாம் என்று பெண்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களை தடுத்து நிறுத்த பார்த்த 15 பெண் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே ஐயப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்த யாருக்கும் அனுமதி இல்லை, அப்படி தடுத்து நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் கூறினார்.