PBL 4 Srikanth, Praneeth Shine
PBL 4 Srikanth, Praneeth Shine

PBL 4 Srikanth, Praneeth Shine – பிரமியர் பாட்மின்டன் லீக் போட்டியில் பெங்களூருவின் சாய் பீரனீத், ஸ்ரீ காந்த் வெற்றி பெற்றனர்.

இந்தியாவில் பிரீமியர் பாட்மின்டன் லீக் (பி.பி.எல்.)தொடரின் 4-வது சீசன் நடக்கிறது.

அகமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி டெஷர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ் அணிகள் மோதின.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு, முதல் போட்டியில் டில்லியின் பிரனாய் பெங்களூருவின் சாய் பிரனீத் மோதினர் முதல் செட்டை பீரனீத் கைப்பற்றினார்.

பின் எழுச்சி கண்ட பிரனாய் 2-வது செட்டை 15-14 என வெற்றி பெற்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அசத்திய பிரனீத் 15-13 என வென்றார். முடிவில் சாய் பிரனீத் 15-12,14-15,15-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

’டிரம்ப்’ போட்டியில் தோல்வியடைந்த டில்லி அணிக்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.

கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் மணிபொங் ஜாங்ஜித்,எவ்ஜெனியா கோசட்ஸ்கயா ஜோடி 2-0 15-13,15-9 புள்ளிகள் என, பெங்களூருவின் லாரன் ஸ்மித், மார்கஸ் எலிஸ் ஜோடியை வென்றது. ’டிரம்ப்’ போட்டியில் வீழ்ந்த பெங்களூரு அணி ஒரு புள்ளியை இழந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது போட்டியில் டில்லியின் டாமி சுகிய்ரடோ, பெங்களூருவின் ஸ்ரீகாந்த் மோதினர்.

முதல் செட்டை 15-6 என வென்ற ஸ்ரீகாந்த், 2-வது செட்டை 12-15 எனக் கோட்டைவிட்டார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 15-10 என கைப்பற்றினார். முடிவில் ஸ்ரீகாந்த் 15-6,12-15,15-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஐந்து போட்டிகளின் முடிவில் பெங்களூரு அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.