கால்களில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கும் அமீர் குறித்து பாவனின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 5 மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இருவரும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் அமீர், பாவனிடம் பலமுறை தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அதற்கு பதில் சொல்ல தயங்கிக் கொண்டிருக்கும் பாவனி சமீபத்தில் நடந்து முடிந்த ஆஹா கல்யாணம் என்ற ரவுண்டில் அமீருடன் இணைந்து திருமண கெட்டபில் நடனமாடினர். இந்த நிலையில் பாவனி தனது சமூக வலைத்தளபக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை, அமீரின் மருத்துவ ரிப்போர்ட்டை பகிர்ந்து, உலகிலேயே நான்தான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனக்கு மிக சிறந்த கோரியோகிராபர், மாஸ்டர் கிடைத்துள்ளார்.

நான் கனவில் கூட நடனமாடுவேன் என நினைத்து பார்த்ததில்லை. நான் உன்னிடம் நிறைய கற்றுக் கொண்டேன். உங்களுக்கு காலில் பிரச்சினை இருந்தும், ஓய்வெடுக்க வாய்ப்பு கொடுத்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கடினமான ஸ்டெப்புகளை போட்டு நடனமாடியுள்ளீர்கள். உங்கள் மீது பெரிய மரியாதை உள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலான நிலையில் பலரும் அமீரை பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/p/ChU_an4vn0N/?igshid=YmMyMTA2M2Y=