DNA Combo
அனிருத் சொன்னபடியே DNA கூட்டணி உருவாகி விட்டது, இதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அனிருத்துடன் இணைந்தால் அந்த படத்தின் இசையும் பாடல்களும் அதிரடியை கிளப்பும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் கடந்த சில வருடங்களாக தனுஷ், அனிருத் உறவில் விரிசல் ஏற்பட்டதால் இவர்கள் கூட்டணி அமைக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தான் அனிருத் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது தனுஷுடன் எப்போது இணைவீர்கள் என ரசிகர் கேட்டதற்கு கூடிய விரைவில் என பதில் அளித்திருந்தார்.

அவரின் பதில் தற்போது உண்மையாகி விட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தில் அனிருத் பாட்டு ஒன்றை பாடியுள்ளாராம்.

இதனை அந்நிறுவனம் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.