பெண்களின் பாதுகாப்பை பற்றி உருவாகி வரும் படம் பட்டறை. கே.வி.ஆனந்தின் உதவி இயக்குனரான பீட்டர் ஆல்வின் இப்படத்தை இயக்கி தயாரிக்க உள்ளார்.
திரையுலகில் எவ்வளவு தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்கள் உருவாகி வந்தாலும் இன்றைய சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு அவசியமான ஒன்றாகவே உள்ளது.
இதனால் தான் பீட்டர் ஆல்வின் பெண்கள் பாதுகாப்பு பற்றிய கதையை கையில் எடுத்துள்ளார். இது குறித்து பீட்டர் ஆல்வின் கூறியதாவது
வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும் என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின். பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும் என கூறியுள்ளார்.
ஜே.டி. சக்ரவர்த்தி, செந்தில் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். செந்தில் அவர்கள் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவும் கூறியுள்ளார்.