பத்து தல டிரெய்லர் ரிலீஸ் ஆகும் நேரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட்டில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இவரது இசையமைப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து மார்ச் 18 ஆம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பத்து தல திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.