பத்து தல திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருந்த “பத்து தல” திரைப்படம் கடந்த 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.

அண்மையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடிய படகுழுவினரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாக இருப்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி பத்து தல திரைப்படம் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.