பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பத்து தல திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருந்த பத்து தல திரைப்படம் கடந்த 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூல் வேட்டையாடி குவித்து வருகிறது.

அதன்படி இப்படம் வெளியான முதல் நாளே 12.30 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திருந்தது. அதனை தொடர்ந்து இப்படத்தின் விநியோகிஸ்தர் சக்திவேல் படம் மாபெரும் வெற்றி பெற்று இருப்பதால் சிம்பு மற்றும் பத்து தல படக்குழுவினருக்கு மாலை அணிவித்து வெற்றி பெற்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.