பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் யூட்யூபில் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. மேலும் ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.