பத்து தல திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த ‘நீ சிங்கம் தான்’ பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருந்த பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இந்நிலையில் சிம்பு ரசிகர்களால் திரையரங்கை அதிர விட்டு கொண்டாடப்பட்ட பாடலான ‘நீ சிங்கம் தான்’ என்னும் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.