பத்து தல திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நம்ம சத்தம் என்னும் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் டீசர் இந்த வாரத்தில் வெளியாக இருப்பதாகவும், வரும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.