பத்து தல திரைப்படத்தின் இயக்குனர் சிம்பு குறித்து பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சிம்பு குறித்து பத்து தல திரைப்படத்தின் இயக்குனர் வருத்தம் அடைந்ததாக பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது, பத்து தல திரைப்படத்தின் இயக்குனர் ஒபேலி. என். கிருஷ்ணா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு படத்திற்கான மிகப்பெரிய பிரமோஷனே அந்தப் படத்தில் நடிக்கும் நடிகரின் லுக் தான். ஆனால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனில் சிம்பு பத்து தல திரைப்படத்தின் கெட்டப்பில் நடித்திருந்தார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சிம்பு மற்றும் கௌதம் மேனன் இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால், அதற்கு என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.