Pandya vs Rahul
Pandya vs Rahul

Pandya vs Rahul – ராகுல், பாண்டியா தண்டனை வழங்குவதை முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, பிசிசிஐ நிர்வாகக் குழு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞ்சர் பரக் ட்ரிபாதி, “ ராகுல் மற்றும் பாண்டியா இருவரும் இளம் வீரர்கள்.

அவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் பொறுப்பற்ற முறையில் கருத்தை தெரிவித்து உள்ளனர். நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள இரண்டு பேரும், அவர்களுக்கு வழங்க வேண்டிய தண்டனை விவரத்தை விசாரணை அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும் என்று நம்புகின்றனர்.” என்றார்.

இதற்கு முன்பாக, இந்த விவகாரம் தொடர்பாக பாண்டியா மற்றும் ராகுலுக்கு 2 போட்டிகளுக்கு தடை விதிப்பதற்கு வினோத் ராய் பரிந்துரை செய்தார்.

ஆனால், நிர்வாகக் குழுவின் மற்றொரு உறுப்பினரான டயானா எடுல்ஜி இந்த விவகாரத்தை பிசிசிஐ-யின் சட்ட வல்லுநரிடம் எடுத்து சென்றார்.

அவர்கள், விதிமுறை மீறல் என்று கருத மறுப்பு தெரிவித்து, விசாரணை அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்தனர்.

இதற்கிடையே, பிசிசிஐ தொடர்பான வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் பரிந்துரையின் பேரில் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா கோபால் சுப்ரமணியனுக்கு மாற்றாக நியமிக்கப்பட்டார்.

இதனால், பாண்டியா மற்றும் ராகுல் சம்பத்தபட்ட வழக்கை அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.