Pandiraj to direct film for Big Boss :
பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரித்து வரும் Endemol Shine India நிறுவனம் அடுத்ததாக தமிழில் படத்தயாரிப்பிலும் கால்தடம் பதிக்க உள்ளனர் இவர்களுடைய முதல் படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளாராம்.
இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.
இதைதொடர்ந்து மூனாவது சீசன் அண்மையில் துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியை தயாரித்து வரும் Endemol Shine India நிறுவனம் அடுத்ததாக தமிழில் படத்தயாரிப்பிலும் கால்தடம் பதிக்க உள்ளனர் இவர்களுடைய முதல் படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளாராம்.
தற்சமயம் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ் அந்த படம் முடிந்த கையோடு இந்நிறுவனத்திற்கான படத்தை இயக்க உள்ளாராம்.