பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கண்ணன் கதாபாத்திரம் மாற்றப்பட உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் கூட்டு குடும்பமாக இருந்து வந்த இந்த சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவால் குடும்பம் மூன்று துண்டுகளாக பிரிந்துள்ளது.

இந்த நிலையில் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் ஒன்று சேர உள்ள நிலையில் திரும்பவும் குடும்பம் ஒன்றாகுமா அல்லது வளைகாப்பு முடிந்தது பிரிந்து செல்வார்களா என்று எதிர்பார்த்து இருந்து வருகிறது.

ஏற்கனவே இது சீரியலில் பல நடிகர் நடிகைகள் மாற்றங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் சாய் காயத்ரி சீரியலில் இருந்து வெளியேறி இருந்த நிலையில் தற்போது கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரமும் இந்த சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார்.

அவருக்கு பட வாய்ப்பு கிடைத்ததின் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தம்பியாக நடித்து வரும் நவீன் இனி பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணனாகவும் நடிக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது.

தனது instagram பக்கத்தில் தீபிகாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு இதனை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.