பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவியா விலகப் போவதாகவும் அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் எனவும் தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் காவியா.. இனி அவருக்கு பதிலாக நடிக்கப் போவது இவரா?? வெளியான ஷாக்கிங் தகவல்

இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. கதிருக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவருக்கு பதிலாக தற்போது காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய நேரம் அவருக்கு வெள்ளித்திரையில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் மேலும் சில பட வாய்ப்புகளும் அவரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விரைவில் விலகிக் கொள்வார் என தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

ஒருவேளை அப்படி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா விலகிக் கொண்டால் அதன் பிறகு அவருக்கு பதிலாக சரண்யா துரோடி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல்கள் கசிந்துள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் காவியா.. இனி அவருக்கு பதிலாக நடிக்கப் போவது இவரா?? வெளியான ஷாக்கிங் தகவல்

இது சமூக வலைதளங்களில் தீயாக பரவ என்னது சரண்யாவா அவர் நடிக்க தொடங்கினால் சீரியலே முடிஞ்சிடுமே என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். காரணம் சரண்யா நடிக்க தொடங்கிய கல்யாணம் முதல் காதல் வரை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது தான் என சொல்லப்படுகிறது.