பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் சொன்ன ஹேப்பி நியூஸால் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சரவண விக்ரம்.

சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வரும் தீபிகாவுடன் இணைந்து யூட்யூபில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென புதிய கார் வாங்கி இருப்பதை புகைப்படத்தை வெளியிட்டு வித்தியாசமாக மகிழ்ச்சியோடு அறிவிக்க ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.