மூர்த்தி செய்த வேலையால் கண்கலங்கி உள்ளார் கதிர்.

Pandian Stores Episode Update 01.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். காலை எழுந்ததும் மூர்த்தியும் ஜீவாவும் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் மீனாவும் வந்து அமர மூர்த்தி கயல் பாப்பா எங்கே என கேட்கிறார். அவை இன்னும் எழுந்தரிக்கலை மாமா என மீனா சொல்ல அந்த நேரத்தில் முல்லை டீ எடுத்து வந்து கொடுக்கிறார். டி எடுத்துக்கொண்ட மூர்த்தி ஏன் தூக்க கலக்கத்துல இருக்க நைட்டு சரியா தூங்கலயா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை என முல்லை கூறிவிடுகிறார். பிறகு கதிர் வந்து சேரில் அமர அவருக்கும் டி கொடுக்கிறார். கதிரின் முகத்தைக் கூடப் பார்க்காத மூர்த்தி தொடர்ந்து ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

சஸ்பெண்ட் விவகாரம் : நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..

மூர்த்தி செய்த வேலை, கண்கலங்கிய கதிர்.. கஸ்தூரியால் வெடிக்கப் போகும் பிரச்சனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

எதையோ சொல்ல வந்து மறந்து விட்டதாக மூர்த்தி சொல்ல மீனா வயசாகிட்டே போகுது என கூறுகிறார். எங்க அண்ணனுக்கு என்ன வயசு ஆகிடுச்சு என ஜீவா கேட்க நாற்பதுக்கும் மேல ஆகிடுச்சுனா இப்படித்தான் சின்ன சின்ன பிரச்சனையா வரும் என சொல்கிறார். எங்க அப்பாவுக்கு 40 வயசுல பிபி வந்திருச்சு என சீனா செல்கிறார். உங்க அப்பாவுக்கு பிறக்கும்போது பிபி வந்திருக்கும் ஜீவா சொல்ல மீனா கடுப்பாகிறார். எங்கப்பா நாளே இவனுக்கு இலக்கணம் தான் என மீனா கூற நீ மட்டும் எங்க அண்ணன சொல்லலாமா என கூறுகிறார் ஜீவா.

அதன்பிறகு மூர்த்தி பணத்தை டாக்டர் கிட்ட கொடுத்து விடு என பணத்தை இருந்து எடுக்க கதிர் சரியென கையை நீட்டுகிறார். ஆனால் மூர்த்தி ஜீவாவிடம் கொடுத்து நீ கொடுத்து விடு என கூறுகிறார். கதிர் கிட்ட கொடுங்க என ஜீவா சொல்ல அவன் கிட்ட குடுக்குறது பிரச்சனை இல்ல அவன் தான் தொலைச்சுடுரானே என கூறுகிறார். கான்ட்ராக்டர் திட்ட கொடுக்கும்போது லேட் ஆனதுக்கு மன்னிப்பு கேட்டு கொடு. கொடுத்ததற்கு ஆதாரமா ரசீது வாங்கிக்கோ என்று சொல்கிறார். மூர்த்தி இப்படி செய்தது கதிர் கண் கலங்குகிறார்.

அதன்பிறகு கதிரை மூர்த்தி கடைக்கு கூப்பிட அவரும் கிளம்பிச் செல்கிறார். முல்லை வெளியில் செல்ல ஐஸ்வர்யா இன்னிக்கு நீங்களா? பாத்திரம் எடுத்துட்டு வரலையா? இல்ல இங்க இருக்கற பாத்திரத்தில போட்டு தரவா இந்த மொத்தமா எடுத்துட்டு போறீங்களா என ஐஸ்வர்யா கேட்கிறார். ஏற்கனவே இருவர் மீது கோபத்தில் இருக்கும் முல்லை இதனால் இன்னும் கோபம் அடைகிறார். நேராக அவர்களிடம் சென்று நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நீங்க செய்யற தப்புக்கு அவர் கஷ்டப்படனுமா? இவளுக்கு பீஸ் கட்ட இப்பணம் திருடிட்டு போனப்ப அவர்தானே கஷ்டப்பட்டார். இப்பவும் உங்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அவர் கஷ்டப்படுறாரு என சொல்கிறார். உங்கள பாக்கவே கடுப்பா இருக்கு நீ என்கிட்ட பேசவே பேசாதே என ஐஸ்வர்யாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார் முல்லை. இருவரும் வருத்தப்படுகின்றனர்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? 

மூர்த்தி செய்த வேலை, கண்கலங்கிய கதிர்.. கஸ்தூரியால் வெடிக்கப் போகும் பிரச்சனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இந்த நேரத்தில் கதிர் வீட்டுக்கு வர அவரை சாப்பிட்டீர்களா எனக்கேட்டு இட்லி வைத்து சாப்பிடச் சொல்கிறார் முல்லை. ராத்திரி அதிகமா கோபப்பட்டு விட்டேன் என சொல்லி மன்னிப்பு கேட்கிறார். பிறகு கதிர் முல்லைக்கும் இட்லி வைத்து சாப்பிடச் சொல்கிறார். அப்படியே கூட்டியும் விட இருவருக்குமிடையே ரொமான்ஸ் நடக்கிறது. இதைப் பார்த்த மீனா நாட்டுல என்ன நடந்தாலும் இவங்க ரொமான்ஸ் மட்டும் குறையவில்லை என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார்.

இந்தப் பக்கம் கண்ணன் மூர்த்தி கோபமாக திட்டியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஐஸ்வர்யா கண்ணனைத் தேடி வருகிறார். இருவரும் நின்று போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாம் என பேசிக்கொண்டிருந்த போது கஸ்தூரி வர என்ன எது எனக் கேட்க ஐஸ்வர்யா 15 ஆயிரம் பணம் கிடைக்குமா என கேட்கிறார். எதுக்கு என்ன ஏது என கஸ்தூரி நோண்டி கேட்க ஐஸ்வர்யா எங்கள் மீது திருட்டு பட்டம் கட்டிட்டாங்க. கதிர் மாமா தான் பணம் கொடுத்து உதவினார். இப்போ அவருக்கு வீட்ல பிரச்சனை. அதனால் தான் பணம் கேட்கிறேன் என கேட்க எங்கிட்ட இது அவ்வளவு பணம் என கூறிவிட்டு கஸ்தூரி சென்றுவிடுகிறார்.

அவங்க நேரா வீட்டுக்கு போயி இதையெல்லாம் சொல்ல போறாங்க என கண்ணன் சொல்ல சொல்லட்டும் அப்படியாச்சு கதிர் மாமாவுக்கு இருக்கிற பிரச்சினை முடியட்டும் என சொல்கிறார் ஐஸ்வர்யா. இத்துடன் பாண்டியன் ஸ்டோர் எபிசோட் முடிவடைகிறது.