பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் சன் டிவி சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Pandian Stores Akash in Sun Tv Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பாண்டியனின் மகன்களாக நடிப்பவர்களில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது வரும் ஆகாஷ்க்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இவருக்கும் ராஜிக்கும் திருமணம் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது சீரியல் கதை பரபரப்பாக சென்று வருகிறது.
இப்படியான நிலையில் ஆகாஷ்க்கு சன் டிவியில் அனாமிகா என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள திகில் த்ரில்லர் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன் டிவி தொடர் என்பதால் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.