இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கா என ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர். 

Pandian Stores 2 Kadhir Singing Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் இரண்டாவது சீசன் எப்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

இதில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆகாஷ் பிரேம்குமார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில் இவர் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் கதிருக்குள்ள இப்படி ஒரு தரம் இருக்கா என கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.