YouTube video

Pandavargal Death After Mahabharatham On Vijay TV : பாண்டவர்கள், கௌரவர்கள் என்ற சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மாபெரும் போரே மகாபாரதப் போர் என அழைக்கப்படுகிறது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி தரக்குறைவாக கௌரவர்கள் நடத்தியதால் கோபம் கொண்ட பாண்டவர்கள் போரின் மூலமாக பழி தீர்க்கின்றனர்.

அராஜகம் மற்றும் அநியாயத்தை இழைப்பவர்களாக இருக்கும் கௌரவர்களை கொன்று பாண்டவர்கள் நாட்டில் தர்மத்தை நிலை நாட்டுகின்றனர். பாண்டவர்களுக்கு துணையாக கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.

போரின் இறுதியில் கௌரவர்கள் அழிக்கப்படுகின்றனர். தன்னுடைய நிலங்களை இழந்த காந்தாரி பாண்டவர்களும் பாண்டவர்களுக்கு துணை நின்ற கிருஷ்ணரின் யாதவ குலமே அடியோடு அழியும் என சாபம் விடுகிறார்.போரில் வென்ற பிறகு பாண்டவர்கள் 36 வருடம் அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்கின்றனர். அதன் பிறகு காந்தாரியின் சாபம் பலிக்க தொடங்குகிறது.

யாதவர் குலமான துவாரகையில் பல பயங்கரங்கள் நடக்கத் தொடங்கியதால் கிருஷ்ணர் அவ்விடத்திலிருந்து விலகியதாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட கிளர்ச்சியில் யாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டதில் அந்த இனமே கிட்டத்தட்ட அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

மான்களை வேட்டையாடும் இஜாரா என்பவர் தவறுதலாக அம்பை கிருஷ்ணரின் பாதத்தில் எழுய்தி விட கிருஷ்ணரின் உடல் மரணத்தை நோக்கிச் சென்ற நிலையில் விஷ்ணுவுடன் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் வியாசர் அர்ஜுனனிடம் உனக்கும் உன் சகோதரர்களுக்கு வாழ்நாள் முடிந்து விட்டது. கலிகாலம் தொடங்கப் போகிறது என கூறியுள்ளார். இதனையடுத்து பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் இமயமலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.இவர்களுடன் எமதர்மன் நாய் வேடத்தில் பயணிக்க தொடங்கியுள்ளார். திரௌபதியில் தொடங்கி நகுலன் சகாதேவன் அர்ஜுனன் பீமன் என ஒவ்வொருவராக மரணத்தை தழுவ தொடங்கியுள்ளனர்.

இறுதியில் யுதிஷ்டர் மட்டும் இமயமலை நோக்கி தொடர்ந்து பயணித்துள்ளார். ஆனால் இறுதியில் அவர் சென்றது சொர்க்கம் என கூறப்படுகிறது. அதன்பிறகு இந்திரன் யுதிஷ்டரை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு போரில் இறந்துபோன பீஷ்மர், போர் வீரர்கள், தளபதிகள், கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணரை சுற்றி அனைத்து கடவுள்களும் இருந்துள்ளனர்.

அவ்வளவு அநியாயங்களை இழைத்த துரியோதனனும் சொர்க்கத்தில் தான் இருந்துள்ளார். துரியோதனனை சொர்க்கத்தில் பார்த்த யுதிஷ்டருக்கு ஒரே வியப்பு.துரியோதனன் இறந்த இடம் புனிதமான இடம். இதனால் அவனது பாவங்கள் அனைத்தையும் மறைந்தது. அவன் கோழையல்ல அவன் சிறந்த மன்னன் தான். ஆகையால் அவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தாக இந்திரன் கூறியுள்ளார்.

இவ்வாறு தான் காந்தாரியின் சாபத்தால் பாண்டவர்கள் மாண்டதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.