முதல் முறையாக மகனின் போட்டோவை வெளியிட்டுள்ளார் பாண்டவர் இல்லம் ரோஷினி.

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அனு. இறுதியாக இவர் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடித்திருந்தார்.

இந்த சீரியலில் இவர் நடித்து வந்த ரோஷினி கதாபாத்திரம் முதலில் வில்லி ரோலாக இருந்தாலும் பிறகு பாசிட்டிவ்வாக மாற்றப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் இவர் பிரசவம் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய மகனுக்கு வான் வியான் என பெயர் சூட்டியுள்ளார்.

அதோட தன்னுடைய மகனின் புகைப்படத்தை முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அனுவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/Cqfphv5JMyJ/?igshid=YmMyMTA2M2Y=