பாகாசூரன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் பீஸ்ட், சாணிக் காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகாசூரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிப்பில் சாம் CS இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நட்டி(நட்ராஜ்) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வரும் 17ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் மீதுள்ள ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்யும் விதமாக படக்குழு இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.