PT Selva Kumar Social Service

P.T Selvakumar Social Service : கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக பி.டி.செலவ குமார் 51 பெண்களுக்கு இலவச தையல் மிஷினை வழங்கினார்.

ஒக்கி புயலின் போது ஐம்பதாயிரம் மரங்கள் நட்டதோடு கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு 1008 – ஏழை பெண்களுக்கு ஆட்டுக் குட்டி, 500 பெண்களுக்கு பசுமாட்டு கன்று குட்டி வழங்கி சாதனை படைத்தவர் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வக்குமார்.

இவர் தற்போது அருமனை மத நல்லிணக்க விழாவில் கலந்து கொண்டு மார்த்தாண்டம், குழித்துறை, தக்கலை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை பெண்கள் 51-பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக கிறிஸ்துமஸ் பரிசாக டைலரின் மிஷின் வழங்கினார்.

கடலில் கலக்கும் பழையாறு நீர் குறித்து பி.டி செல்வ குமார் பேசியதாவது,

குமரி மாவட்டம் பழையாறு தண்ணீர் மணக்குடி கடல் பகுதிகளில் வீணாக கலக்கிறது. இந்த நீரை சேமித்து வைக்க தடுப்பு ஏரிகள் வைத்தால் குமரி கிழக்கு பகுதி மற்றும் நெல்லை தெற்கு பகுதி மக்கள் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

சென்ற முறை இதற்காக கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மீண்டும் அடுத்த கட்டமாக ஆயிரம் விவசாயிகளுடன் கறுப்பு உடை அணிந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என கூறினார்.

இதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் இளையராஜா ராயல்ட்டி கேட்பது பற்றி கேள்வி எழுப்பியதற்கு…

மேடை கலைஞர்கள் சுமார் 1 லட்சம் பேர் இநத் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த ராயல்ட்டியை அவர்கள் கையிலிருந்து தருவார்களா? நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் வசூலிப்பார்களா? மொத்தத்தில் அவர்கள் தொழிலுக்கு வேட்டு வைக்க பார்க்கிறார்.

அடுத்த விஷயம் இந்த ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே வர வேண்டும். ஒரு காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மகாதேவன் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இவர்களுடைய பாடல்களை மேடைகளில் பாடி கச்சேரி நடத்திய இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ராயல்ட்டி கொடுப்பார்களா?

இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? மொத்தத்தில் ஏமாற்றப்படுவது தயாரிப்பாளர் தான் என வேதனையுடன் கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது கருத்து குறித்து கேட்டதற்கு

ஏ.ஆர்.ரகுமான் வளர்ச்சி பொறுக்காமல் ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்த போது ஏ.ஆர்.ரகுமானை ஒரு பேச்சுக்கு கூட பாராட்டாமல் போட்டிக்கு ஆளில்லாததால் கிடைத்தது என்று நக்கலாக பதிலளித்தார்.

இந்த ராயல்ட்டி போராட்டம தொடருமா? என கேட்டதற்கு

இந்த ராயல்ட்டி விஷயத்தில் சட்ட அடிப்படையிலோ அல்லது தார்மீக அடிப்படையிலோ தயாரிப்பளர்களுக்கு கிடைக்க வேண்டிய ராயல்ட்டியை பெற கடைசி வரை போராடுவோம்.

மூத்த தயாரிப்பாளர்கள் முதல் இளம் தயாரிப்பாளர்கள் வரை இந்த விஷயத்தில் ஒன்று பட்டு ஒத்த கருதுதுடன் இருக்கிறார்கள்.

நாளைய தலைமுறையினருக்கும் நமது உரிமையை மீட்டுத் தருவோம். இளையராஜாவின் எஃகோ ஆடியோ தயாரிப்பாளர்களுக்கு தர வேண்டிய ராயல்ட்டியை பல ஆண்டுகளாக தராமல் ஏமாற்றி வருகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும் இதனை நிச்சயம் நீதிமன்றம் மூலம் உரியவர்களுக்கு பெற்றுத் தருவோம் எனவும் பதிலளித்தார்.

PTS Social Service

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.