துணிவு திரைப்படம் இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த படம் கடந்த வாரம் netflix தளத்தில் வெளியாகி அங்கும் வரவேற்பை பெற்று வருகிறது. இது படம் netflix ல் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில் தற்போது வரை எக்கச்சக்கமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் டாப் 10 லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. சுவாரசியமான தகவல் என்னவென்றால் டாப் டென் டிஸ்டியில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழ் படம் துணிவு என்பதுதான்.

மேலும் துணிவு படத்திற்கு அடுத்ததாக அதன் இந்தி டப்பிங் பதிப்பு நான்காவது இடத்தில் இடம் பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் OTT மற்றும் திரையரங்கு என இரண்டிலும் வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் இதுவரை மொத்தமாக 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.