Oru Viral Puratchi

Oru Viral Puratchi : தளபதி விஜய் நடித்து வரும் ஒரு விரல் புரட்சி பாடலின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.

இந்த படம் வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனால் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முழுவதுமாக இறங்கியுள்ளது.

நேற்று ஓ மை பொண்ணு என்ற பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. இதனையடுத்து தற்போது ஒரு விரல் புரட்சி பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் ஒரு விறல் புரட்சி என்ற பாடல் தான் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் விஜய் மாஸாக கிளாஸாக இருப்பதால் #OruViralPuratchi, #SarkarPromoOnSunTV ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளன.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.