ஆர்மேக்ஸ் கணக்கெடுப்பின் லேட்டஸ்ட் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சிறந்த பிரபல நடிகர்களுக்கான கணக்கெடுப்பை மாதம்தோறும் ஆர்மேக்ஸ் ஸ்டார் இந்தியா மீடியா நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தமிழ் சினிமாவில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி அப்பட்டியலில் முதலிடத்தை லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, ராஷ்மிகா மந்தனா, ஜோதிகா, அனுஷ்கா, பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.