OPS Sons in Theni
OPS Sons in Theni

OPS Sons in Theni – தேனி: ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், இளைஞர் இளம் பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்மூலம் அவர் அரசியல் களத்தில் குதித்து மாவட்ட அளவில் அரசியல் செய்து வந்தார்.

ஆனால், ‘திடீரென அவரிடமிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அவரது பதவியை பறித்து விட்டார்.

ஏனெனில், அச்சமயம் இவர் மீது பல புகார்கள் வலம் வந்தன. எனினும் இவரை எப்படியாவது தனக்கு பின் கட்சிக்குள் கொண்டு வந்து அரசியல் வாரிசாக உருவாக்க வேண்டும்’ என்று ஓ.பன்னீர் செல்வம் எண்ணினார்.

இந்நிலையில், தற்போது இவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்பு, தேனி மாவட்டத்தில் ‘தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்’

என்ற பெயரில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் நற்பணி மன்றம் ஒன்றை தொடங்கினார்கள்.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது மகனான ஜெயபிரதீப்பும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.

தற்போது கஜா புயல் நிவாரண பணிகளில் புயல் வேகத்தில் இவர் இறங்கி பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க துணை முதல்வர் ஓபிஎஸ் சென்று கொண்டிருப்பதால், தன் சொந்த தொகுதியை அவரால் கவனிக்கவே முடிவதில்லை.

இதன் காரணமாக , இந்த பொறுப்பை அவரின் 2 -வது மகனான பிரதீப் ஏற்றுள்ளார்.

பன்னீர் செல்வம் உடைய ஒரு மகன்களும், புயல் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஓபீஸ் உடைய அடுத்த வாரிசுகளான இவர்கள் தேனி மாவட்டத்தில் தற்போது கலக்கி வருகின்றனர்.