Home Tamil Cinema News முதல்வராகும் இழிவான எண்ணம் எனக்கு இல்லை : ஓ. பன்னீர் செல்வம்

முதல்வராகும் இழிவான எண்ணம் எனக்கு இல்லை : ஓ. பன்னீர் செல்வம்

ஆட்சியை கவிழ்த்து விட்டு முதல்வராகும் எண்ணம் எனக்கு இல்லை என்று துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டிடிவி தினகரன் ஒரு புது பிரச்சனையை தாமாகவே சிந்தித்து, குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

அதை முதலில் தங்கதமிழ் செல்வனை சொல்ல வைத்து, அவரும் அதே கருத்தை தொடர்ந்து இருக்கிறார் . ஆட்சியை கவிழ்த்து விட்டு முதல்வராகும் இழிவான வேலை  எனக்கு தேவை இல்லை.

3 முறை முதல்வர் :

மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறேன். ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வராக இருந்தேன், சசிகலா முதல்வராக விரும்புவதாக கூறிய போது வேண்டாம் என்றேன்.  பாஜக உடன் சேர்ந்து இருந்தால், முதல்வராக தொடர்ந்து இருப்பேன்.

தினகரன் -ஐ சந்தித்தது ஏன் :

நான் தர்மயுத்தம் நடத்திய போது, முதல்வருக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என்று தினகரன் பேசினார். அதிமுக ஆட்சி கவிழுமா என்ற நிலை சென்று கொண்டிருந்தது. இந்த நிலை நீடிக்க கூடாது என்று எண்ணினேன்.

அப்போது இருவரின் பொதுவான நண்பரின் தொடர்  வற்புறுத்தலால் , இந்த சந்திப்பு நண்பரின் வீட்டில் 15 நிமிடங்கள் நடந்தது. தினகரன் மனம் திருந்தி பேச வருகிறார் என நினைத்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து இறக்கி விட்டு, தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என டிடிவி தினகரன் பேசினார்.

ஜெயலலிதாவிடம் தினகரன் அறிமுகப்படுத்தவில்லை :

கடந்த 1996- இல் பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்தேன். அப்போது நெல்லையில் வீர வரலாறு வெற்றி மாநாட்டிற்கு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநாட்டிற்கு நிதியை திரட்டி நானும் தேனி மாவட்ட செயலாளர் ஆக இருந்த சையத் கானும் 1996இல் ஜெயலலிதாவை சந்தித்து நேரில் வழங்கினோம் ( புகைப்படத்தை ஆதாரமாக காட்டினார் ).

எனவே ஜெயலலிதாவிடம் அறிமுகபடுத்தியதாக தினகரன் கூறுவது பொய் என கூறினார் ஓ. பன்னீர் செல்வம்.