நடிகர் விஜயின் அரபிக் குத்து பாடலுக்கு அல்டிமேட்டாக நடனம் ஆடிய முதியவரின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கோலிவுட் திரை உலையில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு முன்பு கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி விஜயின் நடனத்துடன் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த அரபிக் குத்து பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைப் செய்ய வைத்தது. ஆனால் தற்போது இப்பாடலுக்கு முதியவர் ஒருவர் அல்டிமேட்டாக நடனம் ஆடி இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.