சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம்.

ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://twitter.com/LycaProductions/status/1631157410797850625