Official Announcement About Don Movie

டான் படத்தில் இணையும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Official Announcement About Don Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

இவரின் அடுத்த படமான சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.

இப்படியான நிலையில் நடிகர் சூரியும், சமுத்திரகனியும், இந்தப்படத்தில் இணைந்து நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனுடன் சூரி சமுத்திரகனி இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.