ஒபாமா

ஒபாமா : முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வீட்டில் நேற்று மதியம், சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து அகற்றினர் .

வெடிகுண்டு கைப்பற்றிய நேரத்தில் பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளின்டன் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

இது குறித்து வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்பதை விசாரணை நடத்தி வருவதாக எஃப்பிஐ தெரிவித்தது.

இந்நிலையில், மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக , முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வீட்டிற்கும் தபாலில் வெடிகுண்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

தபாலில் வந்த வெடிகுண்டை, பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், ” வெடிகுண்டு அனுப்பப்பட்டது ஒரு கோழைத் தனமான செயல்” என தெரிவித்தார்.

முன்னாள் அதிபர்கள் வீட்டில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்காவில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வேலையை யார் செய்தது என்பதையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் யார் என்பது விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.