பிகில் வசூலை பின்னுக்கு தள்ளி கைதி திரைப்படம் முன்னேறி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் கார்த்தியின் நடிப்பில் கைதி திரைப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசானது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது. பிகில் ரூ 200 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது.
கைதி கிட்டத்தட்ட ரூ 60 கோடி வசூலை நெருங்கி இரட்டிப்பு லாபம் பார்த்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதத்தின் மூன்று நாளில் கேரளாவில் கைதி அதிக வசூல் செய்துள்ளது. பிகில் வசூல் குறைந்திருப்பதாக அந்த பகுதி பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
Nov 1st – 3rd~ Kerala Boxoffice#Kaithi – 1.83cr#Bigil – 1.65cr
— Malayalam Review (@MalayalamReview) November 4, 2019