Nivin Pauly
Nivin Pauly

Nivin Pauly :  மலையாள நடிகர் நிவின் பாலி பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானார்.

இன்னும் சொல்லப் போனால் தமிழ் ஹீரோக்களுக்கு இணையாக நிவின் பாலிக்கு அந்த படம் வெளியான சமயம் தமிழ்நாட்டில் மாஸ் உருவாகியிருந்தது.

ஆனால் தமிழில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த ரிச்சி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அவருடைய மார்கெட் இங்கு வீழ்ச்சியை கண்டது.

இந்நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

காரணம் இப்படத்தில் நயன்தாராவுடன் முதல்முறையாக அவர் ஜோடி சேர்ந்துள்ளார்.

மேலும் இப்படம் பிரேமம் போல மறுபடியும் தனக்கு தமிழில் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றும் அவர் உறுதியுடன் நம்புகிறார்.

சில காரணங்களுக்காக தள்ளிப்போய்கொண்டே இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் ஓனம் பண்டிகை ஸ்பெஷலாக செப்டெம்பர் முதல் வாரத்தில் இப்படம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.