Nivetha Thomas

Nivetha Thomas : 50 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார் பிரபல நடிகையான நிவேதா தாமஸ்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நிவேதா தாமஸ்.

தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த இவர் ஜெய்யின் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தனக்கு படிப்பு தான் முக்கியம் என நடிப்பிற்கு இடைவெளி விட்டு இருந்தார்.

இந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜா நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

நிவேதா தாமஸுக்கு தற்போது தான் 22 வயது, ஆனால் ரவி தேஜாவுக்கு 50 வயது. இதனால் 50 வயது நடிகருடன் நிவேதா தாமஸ் டூயட் பாடி ரொமான்ஸ் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivetha Thomas Romance With Ravi Teja