நடிகை நித்யா மேனன் தன்னை தாய் கிழவி என்று யாரும் அழைக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை ரசிகர்களிடம் வைத்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை தான் நித்யா மேனன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது அபாரமான நடிப்பை கொடுத்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

தமிழில் இவரது நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சோபனா என்ற கேரக்டரில் நடித்துள்ள நித்தியா மேனனின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தாய்க்கிழவி பாடலை வைத்து பலரும் நித்தியா மேனனை தாய்க்கிழவி என்று அழைத்து வருவதால் நித்யா மேனன் “ப்ளீஸ் என்னை அப்படி அழைக்க வேண்டாம், தாய்க்கிழவினு கூப்பிடாதீங்க எனக்கு அந்த பெயர் பிடிக்கவில்லை” என்று ஒரு வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டிருக்கிறார். அந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.