‘திருச்சிற்றம்பலம்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நித்யா மேனன் கால் முறிந்ததால் வீல் சேரில் வந்து கலந்து கொண்டுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் வீல்சேரில் வந்து கலந்து கொண்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார். இது குறித்து நித்யா மேனன் மேடையில் பேசும்பொழுது “நீங்க இல்லாமல் எப்படி, வீல் சேரிலாவது வரவேண்டும்..” என தனுஷ் கூறியதால் அவர் வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவலோடு இருக்கும் நித்யா மேனனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.