NGK Songs

NGK Songs : சூர்யா ரசிகர்களுக்கு விரைவில் வெறித்தனமான ட்ரீட் இருக்கு என்பதை படத்தின் தயாரிப்பாளர் கூறி ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா தற்போது செலவராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்டை எஸ்.ஆர்.பிரபு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

அதாவது NGK பாடல்கள் அனைத்தும் செம மாஸா கிக்கா வந்திருப்பதாகவும் இவை அனைத்தையும் ரசிகர்களுக்கு விருந்தாக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அது எப்போது என்று மட்டும் கேட்காதீர்கள் என ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார். ஆக மொத்தத்தில் சூர்யா ரசிகர்களுக்கு அதி விரைவில் சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.