NGK Release Date

சூர்யாவின் NGK படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வரும் படம் NGK.. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்தது.

ஆனால் படப்பிடிப்புகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு.

அதாவது அவருடைய பதிவில் கூறியிருப்பது என்னவென்றால் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். அதன் படப்பிடிப்புகள் முடிவடைந்த பிறகு நவம்பர் மாதத்தில் NGK படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். ஏற்கனவே சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் NGK தீபாவளிக்கும் இல்ல பொங்கலுக்கும் இல்ல என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://platform.twitter.com/widgets.js