Next Super Star

Next Super Star : அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்தா விஜயா? என்ற கேள்விக்கு பிரபல நடிகர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்கும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருப்பது உலகம் அறிந்த ஒன்று.

இதனால் ரசிகர்கள் பலருக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? அஜித்தா? விஜயா? என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் தற்போது மாரி 2 படத்தில் நடித்துள்ள டேவினோ தாமஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மாரி 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக டேவினோ தாமஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்தா? விஜயா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், தல அஜித் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகர் என கூறியுள்ளார்.

தனுஷ், சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடித்துள்ள மாரி 2 படம் உலகம் முழுவதும் நாளை ( டிசம்பர் 21 ) முதல் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.